அதிரடி புதுவெடி

அடி சங்கு சக்கர

கண்ணழகி...

கொடி மத்தாப்பு

முக அழகி...

உயிர்த் திரியை பார்வையாலே

பற்ற வைக்கும் பேரழகி...

மின்னும் பூக்கள் கொண்ட

உன் இரவுக் கூந்தலே,

கண்ணைப் பறிக்கும்

என் வாண வேடிக்கை

கொஞ்சம் நான் உரசியதும்

இன்பத் தீப்பொறி தூவும்

கம்பி மத்தாப்பாய் மாறியது

உன் கைவிரல்கள்

உன் உதட்டிலேயே

இனிப்புக் கடை இருக்க,

எனக்கெதற்கடி

பண்டிகைப் பலகாரங்கள்

சுகமாய் எனது

மனதைச் சிதறடித்த

சாகஸக்காரியே...

நீ ஒரு அழகிய அணுகுண்டு

ஆடைக்குள் ஜொலிக்கும்

அதிரடி வெடியே...

பலமுறை வெடிக்கும்

புதுவெடி நீயே

புத்தாடை அணிந்து

பட்டாசு வெடிக்கும்

எல்லோருக்கும் வருடம்

ஒருநாள்தான் தீபாவளி...

சரவெடி சிரிப்புக்காரி

உன்னோடு நானிருக்க,

எனக்கு மட்டும்

எப்போதும் தீபாவளி

0 comments: